பக்கம் எண்:282
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 17. இரவெழுந்தது | | அஞ்சன
மனோசிலை யணியரி
தாரம் துத்த
மாஞ்சி யத்தவத்
திரதம்
திப்பிலி யிந்துப் பொப்புமுறை
யமைத்துத்
தாழி மேதை தவாத துவர்ச்சிகை
150 வண்ணிகை வங்கப் பாவையோ
டின்ன
மருத்துறுப் பெல்லா மொருப்படுத் தடக்கி | |
(மருந்திற்குரியவை) 146
- 151 : அஞ்சனம் ......... அடக்கி | | (பொழிப்புரை) அஞ்சனம், மனோசிலை, அழகிய அரிதாரம், துத்தம், மாஞ்சி,
அத்தவத்திரதம், திப்பிலி, இந்துப்பு ஆகிய இவற்றைப் பைகளில் சமமாக அமைத்துப்
பின்னரும், தாழி மேதை. கெடாத துவற்சிகை, வண்ணிகை, வங்கப் பாவை, என்னும் இம்
மருந்துப் பொருள்களோடு பிற மருந்துப் பொருள்களையும் ஒருங்கு சேர்த்துப் பைகளில்
அடக்கிக் கொண்டு; என்க. | | (விளக்கம்) மாஞ்சி - சடாமாஞ்சி. அத்தவத்திரதம் - மடற்றுத்தம். தாழி - சிவதை.
மேதை - பொற்றலைக்கையாந்தகரை. |
|
|