பக்கம் எண் :

பக்கம் எண்:283

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
           இலைச்சினை யொற்றிய தலைச்சுமைச் சரக்கினர்
           நான மண்ணிய நீனிறக் குஞ்சியர்
           மணிநிறக் குவளை யணிமலர் செரீஇ
     155    யாப்புற வடக்கிய வாக்கமை சிகையினர்
           மல்லிகை யிரீஇ வல்லோர் புணர்ந்த
           செம்பொன் மாத்திரை செரீஇய காதினர்
           அங்கதிர்ச் சுடர்மணி யணிபெற விரீஇ
           மாசின் றிலங்கு மோதிர விரலினர்
     160    வாச நறும்பொடி திமிர்ந்த மார்பினர்
 
                      (இதுவுமது)
             152 - 160 : இனலச்சினை ......... மார்பினர்
 
(பொழிப்புரை) இனலச்சினை பொறித்த தலைச்சுமையாகிய இச்சரக்குகளை உடையராய்க் கத்தூரி பூசப்பட்ட நீலநிறமான தலை மயிரையுடை யராய், அம் மயிரின்கண் நீலமணி போலும் நிறமுடைய  குவளையினது அழகிய மலரைச் செருகிப் பொருந்தும்படி அடக்கி வைத்த வாக்குடைய சிகையினையுடையராய், மல்லிகை மலரை வைத்துத் தொழில் வல்லோர் இயற்றிய செம்பொன் மாத்திரை என்னும் அணிகலன் செருகிய காதினை யுடையராய், அழகிய ஒளிச் சுடரையுடைய மணிகளை அழகுண்டாகப் பதித்து வைத்துக் குற்றமின்றி விளங்குகின்ற மோதிரமணிந்த விரலினையுடையராய், நறுமணப் பொடிதிமிர்ந்த மார்பினையுடையராய் ; என்க.
 
(விளக்கம்) இலச்சினை - முத்திரை. தலைச்சுமையாகிய சரக்கு என்க. நானம் - கத்தூரி. குஞ்சி - தலைமயிர். வாக்கு - மயிர்வகிர்வு. சிகை - தலைமுடி. செம்பொன் மாத்திரை - ஒருவகைக் காதணி. இரீஇ - இருத்தி.