உரை |
|
3. மகத காண்டம் |
|
17. இரவெழுந்தது |
|
காட்சிமுந்
துறுத்த மாட்சிய
ராகிப்
படைத்திற மன்னர் பாடி
சார்ந்து
விடைப்பே ரமைச்சன் மேனாட்
போக்கிய
அறிவொடு புணர்ந்த விசைச்சனு மவ்வழிக்
180 குறிவயிற் பிழையாது குதிரையொடு
தோன்றலும் |
|
(இதுவுமது) 176
- 180 : காட்சி ......... தோன்றலும் |
|
(பொழிப்புரை) தம்மைக் காண்போர் விரும்பி வந்து
காணுமாறு காட்சியை முன்னிட்டுக் கொண்ட மாண்புடையராகிப் படைகளோடிருக்கும் பகை
மன்னர் தம் பாசறையை எய்தினராக; அப்பொழுது இடபகன் என்னும் அமைச்சன் முன்னாள்
உய்த்த பேரறிவுடைய இசைச்சனும் தங்களுடைய குறிப்பின்கண் தவறாத பல குதிரையொடு வந்து
சேர; என்க. |
|
(விளக்கம்) மன்னர் : பகைமன்னர். பாடி - பாசறை. விடைப்
பேரமைச்சன் : இடபகன். இசைச்சன் - உதயணனுடைய பார்ப்பனத்
தோழன்.. |