உரை |
|
3. மகத காண்டம் |
|
17. இரவெழுந்தது |
|
அதிராத்
தோழனை யவணே
யொழித்துக்
குதிரை யாவன கொண்டுவிலை
பகரிய
வழுவில் சூழ்ச்சி வயந்தக
குமரனைக்
குழுவினோர் கட்குத் தலையெனக் கூறி
185 வெம்முரண் வென்றியொடு மேல்வந்
திறுத்த
ஒன்னா ராடற் கொருப்பா டெய்தி |
|
(இதுவுமது) 181
- 186 : அதிரா ......... எய்தி |
|
(பொழிப்புரை) அவ்வாறு தங்கள் கருத்தின்படி குதிரைகள்
பலவற்றையுங் கொணர்ந்த தோழனாகிய இசைச்சனை, அவ்விடத்திலேயே விட்டு அக்
குதிரைகளைக் கைக்கொண்டு விலை கூறுதற்பொருட்டு குதிரை வணிகர்போன்று
வேடங்கொண்ட ஒரு குழுவிற்குக் குற்றமற்ற சூழ்ச்சியினையுடைய வயந்தக குமரனைத் தலைவனாக
அமைத்து வெவ்விய ஆற்றலோடும் வெற்றியோடும் இராசகிரிய நகரத்தின்மேல் போர்க்கு
வந்து தங்கிய அப் பகை மன்னரை வெல்லுதற்குத் தம்முள் ஒற்றுமையாகக் கூடி;
என்க. |
|
(விளக்கம்) அதிராத் தோழன் - நடுக்கமில்லாத இசைச்சன்,
குதிரை வாணிகக் குழுவினோர்க்கு என்க. ஒன்னார்:பகைவர். ஆடற்கு- வெல்லு
தற்கு. |