உரை |
|
3. மகத காண்டம் |
|
17. இரவெழுந்தது |
|
வழக்கொடு
புணர்ந்த வாசி
வாணிகம்
உழப்பே மற்றிவ னொன்பதிற்
றியாட்டையன்
மண்டமர்த் தானை மகத மன்னனும்
190 பண்டையன் போலா னாதலிற்
படையொடு
தொன்னகர் வரைப்பக மெந்நக
ராக்க
இருந்தனம் வலித்தனம் யாமெனப் பலவும்
பொக்க முடையவை பொருந்தக்
கூறிப்
பகைகொண் மன்ன னகநகர் வரைப்பின்
195 யாவ ராயினு மறிந்துவந்
தடைவது
காணுங் காலைக் கரும
நமக்கெனக்
கணங்கொண் மன்னரு மிணங்குவன ராகிப் |
|
(இதுவுமது) 187 - 197
: வழக்கொடு...........இணங்குவனராகி |
|
(பொழிப்புரை) அப் பகைப் பாசறையினரைக் கண்டு, ''ஐய !
யாங்கள் எங்கள் முன்னோர் வழக்கத்திற்கு இயைய வழிவழியாகக் குதிரை வணிகம் செய்யும்
வணிகராவேம். இந்த இராசகிரிய நகரத்து மன்னன் தருசகன் எமக்கு ஒன்பது ஆண்டுகளாகப்
பழக்கமுள்ளவன். போரின்கண் மிக்குச் செல்லும் படைகளையுடைய இம் மகத நாட்டு
மன்னன் பண்டுபோல எம்மிடத்தே அன்புடையன் அல்லன் ஆயினன். ஆதலின் யாங்கள் படை
கூட்டி இந்தப் பழைய நகரத்து எல்லையெல்லாம் எங்களுக்குரியதாக்கக் கருதி
நெடுநாளாக நினைத்திருந்தோம்; அதற்குச் செவ்வி பார்த்துக் கொண்டிருக்கின்றோம்''
என்று இன்னோரன்ன பல பொய்ம் மொழிகளையும் அவருக்குப் பொருந்துமாறு நன்கு கூறி, ''ஐய!
நீங்கள் எங்கள் கருத்தின்படி அம் மன்னனோடு போர் செய்தற்கு வந்திருத்தலால்
உங்களுக்கு உதவியாக யாங்கள் இந்த நகரத்தினுள்ளே புகுந்து அங்கே நிகழ்வனவற்றை அறிந்து
வந்து கூறுவது யாங்கள் செய்யத்தகுந்த உதவியாகும்'' என்று கூறா நிற்ப. அது கேட்ட அப்
பகை மன்னர்களும் தம்முட் கூடி ஆராய்ந்து இவர்கள் வேண்டுகோளுக்கு இணங்குவாராய் ;
என்க |
|
(விளக்கம்) வழக்கு - முன்னோர் வழக்கம். வாசிவாணிகம் :
குதிரை வாணிகம். ஒன்பதிற்றியாட்டையன் - ஒன்பது யாண்டுப் பழக்கமுடைய வன். அமர்
மண்டுதானை என மாறுக. மகதமன்னன் : தருசகன். பண்டை யன் போலான் - முன்போல
நட்புள்ளவனாக இரான். பொக்கம் - பொய். கணம் -
கூட்டம். |