உரை |
|
3. மகத காண்டம் |
|
17. இரவெழுந்தது |
|
பெரும்பரி
சார மொருங்குட
னருளி அற்ற
மவர்மாட் டொற்றின ராகி 200 அருத்த
மருங்கல நிரைத்தனர்
தந்திட்
டின்றைக் கொண்டு மிவணி
ராமினென்
றொன்றிய காதலோ டுண்ணெகிழ்ந் துரைப்ப |
|
(பகை மன்னர்
செயல்)
198 - 202 : பெரும்பரி ......... உரைப்ப |
|
(பொழிப்புரை) அதுகேட்ட அம் மன்னர்கள் மகிழ்ந்து அவர்க்குச்
செய்யவேண்டிய வழிபாடுகளைச் செய்து, ''ஐய! நீவிர் அத் தருசகனுடைய நகருட் சென்று அங்கு
நிகழும் சோர்வுகளை ஒற்றி வந்து எங்கட்குக் கூறுங்கள்'' என்று கூறிப் பொருள்களையும்
அணிகலன்களையும் ஓரிடத்தே நிரப்பிக் கொடுத்து ''இற்றை நாள் தொடங்கி நீங்கள்
இவ்விடத்திருங்கள்'' என்று முகமன் கூறிப் பொருந்திய அன்போடு நெஞ்சு நெகிழ்ந்து கூறா
நிற்ப; என்க. |
|
(விளக்கம்) பரிசாரம் - வழிபாடு. பரிசாரம் அருளி - வழிபாடு
செய்யும் பணியாளரை வழங்கி எனினுமாம். அற்றம் - சோர்வு. இன்றைக்கொண்டு - இன்று
தொடங்கி. இவணிராமின் -
இவ்விடத்திருங்கள். |