பக்கம் எண் :

பக்கம் எண்:291

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
         
     210    மண்டில மறைந்த மயங்கிருள் யாமத்
           தெண்டிசை மருங்கினு மின்னுழி யெறிதுமென்
           றறியச் சூழ்ந்த குறியின ராகி
 
        (உதயணனுடைய வீரர் இரவிற் போர் புரிதல்)
              210 - 212 : மண்டில ......... ஆகி
 
(பொழிப்புரை) ஞாயிற்று மண்டிலம் மறைந்த இருள் மயங்கிய நள்ளிரவின்கண் எட்டுத் திசைகளினும் வைத்து இப் பகைவரை இன்னின்ன இடத்திலே தாக்குவேம் என்று தம்முள் எல்லோரும்  அறியும்படி ஆராய்ந்து துணிந்த துணிவினை உடையவராய்; என்க.
 
(விளக்கம்) மண்டிலம் - ஞாயிற்று மண்டிலம். இருள் மயங்கு யாமம் என்றது நள்ளிரவினை. எறிதும் - தாக்குவேம்; கொல்லுவேம் எனினுமாம்.