உரை |
|
3. மகத காண்டம் |
|
17. இரவெழுந்தது |
|
நூலிற் பரந்த
கோல
வீதியுட்
படைநகர் வரைப்பகம் பறைக்க ணெருக்கிப்
215 பாடி காவல ரோடியாண்
டெறிந்து
புறக்காப் பமைத்துத் தலைக்காப்
பிருக்கும்
வல்வில் லிளையர்க் கெல்லை
தோறும்
காப்புநன் கிகழன்மின் கண்படை
யுறந்தென்
றியாப்புறக் கூறி யடங்கிய பொழுதிற்
|
|
(இதுவுமது) 213
- 219 : நூலில் ......... பொழுதில்
|
|
(பொழிப்புரை) அப் பாசறைக்கண் அமைந்த நூலிட்டு இயற்றிய
பரவிய அழகிய வீதியின் கண்ணும் அகத்தும் பாசறைக் காவலர் பறைய டித்து ஆங்காங்குப்
புறக் காவலமைத்துத் தலைக் காவலாக அமைந்தி ருக்கும் வலிய இளமை வாய்ந்த வில்
வீரர்களுக்கு எல்லை தோறும் சென்று சென்று நன்கு காவல் செய்தலின்கண் சோர்ந்து
விடாதீர். நன்கு விழிப்புடன் காவல் செய்யுங்கள்! என்று பொருத்தமாகக் கூறி ஒலி
அடங்கிய நள்ளிரவின்கண் என்க.
|
|
(விளக்கம்) வீதி - பாசறையிலுள்ள வீதி. பறைக்கண் எருக்கி
- பறை யடித்து. உறந்து - மிகுந்து. உறந்து இகழன்மின் என்க. ஒலியுண்டாகிய
பொழுதில் என்க.
|