பக்கம் எண் :

பக்கம் எண்:293

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
         
     220    கலங்கத் தாக்கலின் மெலிந்த தாகி
           உடையினு முடையா தாயினும் யாவரும்
           அடையுந் தான மறியக் கூறி
           நாற்பால் வகுத்து மேற்பா லமைத்துக்
           காவலன் றன்னையுங் காவலு ணிறீஇப்
 
                      (இதுவுமது)
              220 - 224 : கலங்க ............ நிறீஇ
 
(பொழிப்புரை) யாம் இப் பகைவர்கள் மனங் கலங்கும்படி தாக்குதலாலே இப் படை ஆற்றல் குன்றி மெலிந்து உடைந்து ஓடுவதாயினும் உடையாது எதிர்த்து நிற்பதாயினும் இப்போருக்குப் பின்னர் யாம் அனைவரும் அடைதற்குரிய இடம் இதுவாகும் என்று எல்லோரும் அறியும்படி கூறிப் பின்னர்த் தம்மை நான்கு கூறாக வகுத்துக்கொண்டு அவற்றுள் மேற்குப் பகுதியில் தம்மரசனைச் சிறந்த காவலின் அகத்தே நிறுத்தி வைத்து; என்க.
 
(விளக்கம்) அடையும் தானம் - முடிவின்கண் வந்து கூடுதற்குரிய இடம். நாற்பால் - நான்கு பகுதி. மேற்பால் - அவற்றுள் முதற்பகுதி  என்க. காவலன் - உதயணன்.