உரை |
|
3. மகத காண்டம் |
|
17. இரவெழுந்தது |
|
225 பொற்புடைப் புரவி
பொலிய
வேறி
நற்படை நலியா நன்மையொடு
பொலிந்த
சாலிகைக் கவயங் கோல
மாகப்
புக்க மெய்யினர் பூந்தார்
மார்பிற்
றாளாண் கடுந்திறல் விரிசிகன் வாழ்கென
230 மேலாண் மல்லன் பாடி
காத்த
நீலக் கச்சை நிரைகழன்
மறவரை
வேலிற் சாய்த்துங் கோல மான்றேர் |
|
(இதுவுமது) 225
- 232 : பொற்புடை ......... சாய்த்தும் |
|
(பொழிப்புரை) அழகினையுடைய குதிரைகளின் மேல் பொலிவுறும்படி
ஏறிப் பகைப் படை தம்மைத் துன்புறுத்தாத நன்மையோடு பொலிவுடைய சாலிகையாகிய
கவசத்தை அழகாக அணிந்த உடலை உடையராய், அழகிய மாலையணிந்த மார்பினையும்,
தாளாண்மையையும், கடிய ஆற்றலையு மு டைய விரிசிக மன்னன் வாழ்க! என்று ஆரவாரித்துக்
கொண்டு, தலைவ னாகிய மல்லன் என்பவனுடைய பாசறையைக் காத்திருந்த நீலக் கச்சை
யையணிந்த நிரல்பட்ட அணியாகி நின்ற வீரக் கழலணிந்த மறவர்களை வேலால் குத்திச்
சாய்த்தும்; என்க. |
|
(விளக்கம்) பொற்புடை - அழகுடைய கலணை. சாலிகையாகிய கவயம்
என்க; இருபெயரொட்டு. விரிசிகன் வாழ்க என்று ஆரவாரித்துக் கொண்டு மல்லன் மறவரைச்
சாய்த்தனர் என்க. அஃதெற்றுக்கெனின், அங்குள்ளோர் அங்குத் தாக்குபவர் விரிசிகன்
மறவர் என்று நினைத்தற்கென்க. நிரை மறவர், கழன் மறவர் எனத் தனித்தனி கூட்டுக.
நிரை - அணி. மேலாள் ஆகிய மல்லன் என்க. மேலாள் -
அரசன். |