பக்கம் எண் :

பக்கம் எண்:295

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
            வேலிற் சாய்த்துங் கோல மான்றேர்
            அடவி வாழ்கென வார்த்தன ருராஅய்த்
            தடவரை மார்பிற் றளராச் செங்கோல்
     235    மிலைச்சன் வாழ்கெனத் தலைக்காப் பிருந்த
            தண்ட மள்ளரைத் தபுத்துயி ருண்டும்
 
                      (இதுவுமது)
             232 - 236 : கோலம் ......... உண்டும்
 
(பொழிப்புரை) அழகிய குதிரை பூண்ட தேரையுடைய அடவி மன்னன் வாழ்க என்று ஆரவாரித்தவராய்ச் சென்று பெரிய மலை போன்ற மார்பினையுடையவனும், தளராத செங்கோலையுடையவனும்,  ஆகிய மிலைச்சன் என்பான் வாழ்க! என்று, தலைக் காவலாக இருந்த அவன் படை வீர ரைக் கொன்று உயிருண்டும்; என்க.
 
(விளக்கம்) அடவி - ஓர் அரசன். அடவி வாழ்க என்று மிலைச்சன் மல்லரை உயிருண்டு என்க. தலைக் காப்பு - முதன்மையான காவல் : மெய்க் காவலுமாம்.