பக்கம் எண் :

பக்கம் எண்:296

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
            கொண்ட வார்ப்பொடு கூட வெலிச்செவி
            பண்டரும் பல்லியம் பாற்படத் துவைத்தும்
 
                      (இதுவுமது)
            237 - 238 : கொண்ட ......... துவைத்தும்
 
(பொழிப்புரை) எலிச் செவியரசன் வாழ்க! என்று மேற்கொண்ட  ஆரவாரத்தோடு கூட இசை தருகின்ற பல்வேறு இசைக் கருவிகளை இசைக் கூறுகள் தோன்ற இயக்கி அயோத்தியரசன்! படைஞரைக் கொன்றும்;  என்க.
 
(விளக்கம்) கொண்ட ஆர்ப்பு - மேற்கொண்ட ஆரவாரம். அயோத்தி யரசன் பெயர் இங்கே கூறப்படாமையின் எலிச் செவியரசன் வாழ்க என்று அவனது முரசினை முழக்கி அயோத்தி யரசன் படைஞரைக் கொன்று; என்க. எலிச் செவி - எலிச்செவியரசன். பல்லியம் - பலவாகிய இசைக் கருவி. பால் - பகுதி; இசைப் பகுதி என்க.