உரை |
|
3. மகத காண்டம் |
|
17. இரவெழுந்தது |
|
விறல்வே சாலி பாடி குறுகி 240
அடலருஞ் சீற்றத் தரசுபல
கடந்த
விடலரும் பைந்தார் வேந்தருள்
வேந்தன்
சங்கரன் வாழ்கெனத் தங்கல ரெறிந்தும் |
|
(இதுவுமது)
239 - 242 : விறல்.........எறிந்தும் |
|
(பொழிப்புரை) வெல்லுதற்கரிய வெகுளியையுடைய பகையரசர் பலரையும்
வென்று கடந்த கேண்மை கொண்டோர் விடுதற்கரிய பண்புகளையுடைய பசிய வெற்றி
மாலையணிந்த வேந்தருட் சிறந்த வேந்தனாகிய சங்கர மன்னன் வாழ்க! என்று ஆரவாரித்துக்
கொண்டு போய் வெற்றி பொருந்திய வேசாலி மன்னன் பாசறையை அணுகி அங்குள்ள
பகைவர்களைக் கொன்றும்; என்க. |
|
(விளக்கம்) விறல் - வெற்றி. வேசாலி : ஓரரசன்.
பாடி-பாசறை. கேண்மை கொண்டார் விடலரும் வேந்தன் என்க. சங்கரன் : ஓரரசன்.
தங்கலர் - பகைவர். எறிந்தும் -
கொன்றும். |