உரை |
|
3. மகத காண்டம் |
|
17. இரவெழுந்தது |
|
வத்தவன் கொண்ட மாமுர
சியக்கி
அயிலிற் புனைந்த வெயில்புரை யொள்வாள்
245 உரீஇய கைய ராகி
யொரீஇக்
காவன் மறவரைக் கண்படை
யகத்தே
வீழ நூறி வேழந்
தொலைச்சி
மலையெனக் கவிழ மாமறித்
திடாஅக்
கொலைவினைப் படைமாக் கொடியணி நெடுந்தேர்
250 வத்தவன் மறவர் மொய்த்தன
ரெறியக் |
|
(இதுவுமது)
243 - 250 : வத்தவன் ......... எறிய |
|
(பொழிப்புரை) உதயணனுக்குரிய பெரிய முரசத்தை முழக்கிக் கொண்டு
இரும்பாலியற்றிய வெயில் போன்று சுடர் வீசும் வாட்படையை உறையி னின்றும் உருவிய
கையராய்ச் சென்று ஆங்குக் காவல் செய்திருந்த மறவர்களைத் துயிலின்கண் கொன்று
யானைப் படைகளை வென்று மலை கவிழ்ந்தாற் போலக் கவிழ்ந்து வீழும்படி செய்து
குதிரைகளைக் கொன்று, கொல்லுந் தொழிலையுடைய காலாட் படைகளையும் குதிரை பூண்ட கொடி
யுயர்த்திய நெடிய தேர்களையும் அவ்வுதயணனை மறவர்கள் சூழ்ந்து கொண்டு அழித்தலாலே
என்க. |
|
(விளக்கம்) வத்தவன் : உதயணன். வத்தவனுக்குரிய சங்கேத
ஒலியால் முரசினை முழக்கி என்பது கருத்து. அயில - இரும்பு. புரை; உவம உருபு. உரீஇய -
உருவிய. ஒரீஇ - சென்று. மா - குதிரை. மறித்திடா - மறிக்கச்
செய்து. |