பக்கம் எண் :

பக்கம் எண்:299

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
            கடுவளி யுற்ற கடலி னுராஅய்
            அடலரும் பெரும்படை யார்ப்பொடு தொடங்கித்
            தம்முட் டாக்கிக் கைம்மயக் கெய்தி
            மதக்களி யானை வத்தவன் வாழ்கவென்
     255    றுரைப்ப மற்றவ ரறிந்தன ராகி
 
                     (இதுவுமது)
               251 - 255 : கடு ......... ஆகி
 
(பொழிப்புரை) கடிய சூறைக் காற்று மோதாநின்ற கடல் போலப் பொங்கி எழுந்து வெல்லுதற்கரிய பகைவருடைய பெரிய படைகள் ஆரவாரத்தோடு தொடங்கித் தம்முள் தாமே தாக்கியவராய்ப் பெரிதும் மயக்கம்
எய்தா நிற்ப, உதயணன் மறவர்கள் இறுதியில் மதக் களிப்பையுடைய யானையையுடைய வத்தவ நாட்டு அரசனாகிய உதயண மன்னன் வாழ்க! என்று ஆரவாரிப்ப அதுகேட்ட அப் பகைப் படை யரசர்கள் ஒருவாறு உண்மையை உணர்ந்தவராய்; என்க.
 
(விளக்கம்) கடுவளி - விரைவுடைய சூறைக் காற்று. கைமயக்கு - செய லின்கண் மயக்கம். அறிந்தனர் - இங்குத் தாக்குவோர் உதயணன் மற வர் என்று அறிந்து கொண்டவர்.