பக்கம் எண்:3
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 1. யாத்திரை போகியது | | என்வகை
யறிந்த நன்பொரு ளாளன்
பெரும்படைத் தானைப் பிரச்சோ
தனன்றன் 15 அரும்படை யழியா
வாற்றலிற்
போந்தவன்
மடமகட் கொண்ட விடனறி சூழ்ச்சி
யூகி யுளனெனி னிகழா
னிவனெனச் சாவுமுந்
துறுத்த வலிப்பினனாகித்
தீயகங் கழுமிய கோயில் வேவினுள்
20 தேவியை யிழந்து பூவிதழ்ச்
சோலைப்
புல்லென் யாக்கையொடு போயின னுதயணன் | |
(இதுவுமது) 13 -21 :
என்வகை,,,,,,,,,,,,உதயணன்
| | (பொழிப்புரை) என்னுடைய
இயல்பினை நன்குணர்ந்தவனும் எனக்கு உறுதி பயக்கும் நல்ல பொருளாக
அமைந்தவனும், யான் சிறைப்பட்டிருந்த காலத்தே பெரிய படைக்கலன்களை
ஏந்திய படைஞரையுடைய பிரச்சோதன மன்னனுடைய வெல்லுதற்கரிய
படை மறவரை யெல்லாம் அழித்துத் தனது ஆற்றலாலே என் முன்னர் வென்றி
கூறிவந்து அந்த மன்னவனுடைய இளமகளை யான் கைப்பற்றிக் கொண்டமைக்குக்
காரணமான இடனும் காலமும் பிறவும் எல்லாம் அறிகின்ற சூழ்ச்சியைச்
செய்தவனாகிய யூகி உயிரோடிருப்பானயின் இப் புல்லியோன் என்னை
இங்ஙனம் எளியனாகக் கருதி இகழ்வனோ இகழானே! இனி யான் உயிர்
விடுதலே செய்யத்தக்கதாம் என்று தனது சாவினையே முன்னிட்ட
துணிவினையுடையனாகித் தன் அரண்மனை தீயினில் வெந்த
நிகழ்ச்சியிலே தன் கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தையையும்
இழந்தவனாய்ப் பொலிவிழந்த யாக்கையோடு கையறவு கொண்டு அயலிலுள்ளதொரு
பூம்பொழிலிலே புகுவானாயினன் என்க.
| | (விளக்கம்) வகை-இயல்பு.
நன்பொருள் - உறுதிப்பொருள் - எனக்கு எல்லா நன்பொருளும்தானே ஆகியவன்
என்றவாறு. படைத்தானை - படைக்கலனேந்தியதானை, இருபெயரொட்டுமாம்.
அழியா - அழித்து. மடமகளைக் கொண்ட சூழ்ச்சி இடனறி
சூழ்ச்சி. எனத் தனித்தனி கூட்டுக. இவன் - என்றது, ஆருணியரசனை.
இப்புல்லியோன் என்பதுபட நின்றது, கோயில்வேவு-கோயில்
வெந்தநிகழ்ச்சி. தேவி-வாசவதத்தை. உதயணன்-எழுவாய்.
|
|
|