பக்கம் எண்:30
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 2. மகதநாடு புக்கது | | 15 வயல்கொள் வினைஞர்
கம்பலை வெரீஇக் கயமூழ்
கெருமை கழைவளர்
கரும்பின் விண்ட
விளமடன் முருக்கித்
தண்டாது தோகைச்
செந்நெல் சவட்டிப் பாசிலை
ஒண்கேழ்த் தாமரை யுழக்கி வண்டுகள் 20 ஆம்ப
லகலிலை முருக்கிக் கூம்பற்
குவளைப் பன்மலர் குழைத்துத் தவளைத்
தண்டுறை கலங்கப் போகி
வண்டினம் பாட லோவாப்
பழனப் படப்பைக்
கூடுகுலைக் கமுகின் கொழுநிழ லசைந்து 25
மன்றயற் பரக்கு மருதந் தழீஇக்
| |
(மருத நிலத்தின்
மாண்பு) 15 - 25 :
வயல்............தழீஇக்
| | (பொழிப்புரை) குளத்துநீரிலே மூழ்கிக் கிடக்கும் எருமைகள் வயலிலே தொழில் கொண்ட
உழவர் ஆரவாரத்திற்கு அஞ்சிக் கோலாக வளர்கின்ற கரும்பின்கண்
தோன்றிய இளமடல்களை முருக்கியும், அமையாமல் தோகையையுடைய செந்நெற்
பயிரையழித்தும், பசிய இலைகளையுடைய ஒளியும் நிறமு மமைந்த தாமரை மலர்களை
உழக்கியும், வண்டுகள் உகளாநின்ற ஆம்பலினது அகன்ற. இலைகளை அழித்தும்,
கூம்பிய குவளையினது பலவாகிய மலர்களைக் குழையச் செய்தும், தவளைகளும்
தண்ணிய துறையினீரும் ஒரு சேரக் கலங்கும்படி பாய்ந்து சென்று கரை
யேறி, வண்டினம் இசைபாடுதல் ஒழியாத பழனத்திலுள்ள தோட்டத்தின்கண்
ஒருங்கே கூடிக்கிடக்கும் குலைகளையுடைய கமுகின் கொழுவிய நிழலிலே
கிடந்து இளைப்பாறிப் பின்னர்த் தம் தொழுவங்களின் பக்கத்தே
பரவிச் செல்லுதற் கிடனான வளமிக்க மருத நிலத்தாற் றழுவப்பட்டு
என்க.
| | (விளக்கம்) எருமை வெரீஇ
முருக்கிச் சவட்டி உழக்கி முருக்கிக் குழைத்துக் கலங்கிப்போகி அசைந்து
பரக்கும் மருதம் என்க. இவ்வெருமையின் செயலாலேயே இப்புலவர் பெருமான்
வளமிக்க மருதநிலப் பரப்பொன்றினைப் படைத்துத் தருதலுணர்க.
வயல் கொள் வினைஞர் - உழவர்.
கம்பலை - ஆரவாரம். விண்ட- தோன்றிய. முருக்கி,சவட்டி, குழைத்து என்பன
அழித்தென்னும் ஒரு பொருளன. தவளையையுடைய தண்டுறையில் தவளையும் ,நீரும்
கலங்கப் போகி என்க. பழனம்-ஊர்ப் பொது நிலம். படப்பை - தோட்டம்.
கூடு குலை ;வினைத்தொகை, அசைந்து-இளைப்பாறி. மன்று-தொழுவம் ; ஊர்
மன்றமுமாம்.
|
|
|