பக்கம் எண் :

பக்கம் எண்:301

உரை
 
3. மகத காண்டம்
 
18. தருசகனோடு கூடியது
 
            அரணமை பெருமலை யடைவது பொருளென
            முரணமை மன்னர் முடுகிய பின்னர்
 
                   (தோற்றுவாய்)
              1 - 2 : அரண்.........பின்னர்
 
(பொழிப்புரை) இவ்வாறு உதயணன் மறவரால் தாக்குண்ட பகைமை யமைந்த அச்சங்க மன்னர்கள், இனி யாம் நமக்கு அரணாக அமைதற்குரிய பெரிய மலைகளை அடைவதே நலமாம் என்று கருதி, விரைந்து ஓடிப் போன பின்னர்; என்க.
 
(விளக்கம்) முரண் - பகைமை. மன்னர் - சங்க மன்னர்.