உரை |
|
3. மகத காண்டம் |
|
18. தருசகனோடு கூடியது |
|
சலந்தீர் பெரும்புகழ்ச் சதானிக
வரசனும்
மறப்பெருந் தானை மகத
மன்னனும்
சிறப்புடைக் கிழமை செய்ததை யறிதலின்
20 அகப்பாட் டண்மைய னல்லதை
யிகப்பத்
தாதலர் பைந்தார்த் தருசக
னமக்கு வேறல
னவனை வென்றியி னீக்கி
மாறுசெயற் கிருந்த மன்னரை
யோட்டியது
பண்ணி கார மாகக் கண்ணுற்று
25 முற்பாற் கிழமை முதலற
வின்றி
நற்கியாப் புறீஇப் போது
நாமெனச்
|
|
(இதுவுமது)
17 - 26 : சலம்............நாமென்
|
|
(பொழிப்புரை) ''சகமற்ற பெரிய புகழையுடைய தன் தந்தையாகிய சதானிக மன்னனும், மறப்
பண்புமிக்க பெரிய படைகளையுடைய நின் தந்தையாகிய மகத மன்னனும் பண்டு சிறப்புமிக்க
நட்புக் கிழமை செய்திருந்த நிகழ்ச்சியை அவ்வுதயணன் அறிதலாலே அத்தகைய
மன்னன் மகனாகிய நீ மிக நெருங்கிய கேண்மையுடையவன் அல்லனாக இருத்தலை அகற்றக் கருதி,
'' தருசகன் நமக்கு அயலானல்லன். அவனை வெற்றியினின்றும் அகற்றி மாறுபாடு செய்து
தோற்பித்தற்கு எண்ணிப் படை கூட்டி வந்திருந்த அச் சங்க மன்னரை நாமே
புறங்கொடுத்தோடச் செய்து அச் செயலே அத் தருசகனுக்கு யாம் வழங்கும் காணிக்கையாகச்
செய்து அவனை நேரில் கண்ணுற்றுப் பண்டைக் காலத்திலிருந்த நட்புக் கிழமை முதலற்றுப்
போகாதபடி, நன்றாக மீண்டும் தொடர்புறுத்தி வைத்துப் பின்னர் நம் நாட்டுக்குப்
போவோம்; என்று கருதி'' என்க.
|
|
(விளக்கம்) சலம் -
வஞ்சகம். சதானிகவரசன் : உதயணன் தந்தை. மகத மன்னன் : தருசகன் தந்தை. சிறப்புடைக்
கிழமை - சிறப்புடைய நட்புரிமை அகப்பாட்டு அண் மையன் அல்லதை - மிக நெருங்கியவன்
அல்லனாக இருத்தலை ; இகப்ப - நீக்குதற்கு ; அஃதாவது நண்பனாக்குதற்கு என்றவாறு. தாது -
மகரந்தம். வேறலன் - அயலானல்லன், மன்னரை - சங்கமன்னரை. பண்ணிகாரமாக -
காணிக்கையாக. முதலறவு - வேரற்றுப் போதல். நற்கு - நன்றாக. யாப்புறீஇ -
தொடர்புபடுத்தி.
|