உரை |
|
3. மகத காண்டம் |
|
18. தருசகனோடு கூடியது |
|
சிறந்த தோழர் சிலரொடு
சென்று
விரவுமலர்த் தாரோ யிரவெறிந்
தகற்றினன்
என்பது கூறென மன்பெருஞ்
சீர்த்தி 30 வயந்தக
குமரனை வாயி லாகப்
போக்கிய பின்றையவன் புனைநகர்
வீதியுட்
|
|
(இதுவுமது)
27 - 31 : சிறந்த ......... பின்றை
|
|
(பொழிப்புரை) ''தனக்குச் சிறந்த நண்பர் ஒரு சிலரோடு அச்சங்க மன்னர் படைவீட்டிற்குச்
சென்று நெருநல் இரவிலேயே அப் பகை மன்னர்களைத் தாக்கி ஓட்டி விட்டனன் என்னும்
இச்செய்தியை அம் மன்னன் பால் கூறுவாயாக''ன்று நிலைபெற்ற பெரும் புகழையுடைய
அவ்வயந்தக குமரனைத் தூதாகப் போக்கிய பின்னர்; என்க.
|
|
(விளக்கம்) தோழர்
சிலரொடு சென்று என்றான் உதயணனுடைய போராற்றல் தோன்றுதற்கு. விரவு மலர்த்தாரோய்!
என்றது வயந்தகனை விளித்தபடியாம். சீர்த்தி - புகழ். வாயில் -
தூது.
|