உரை |
|
3. மகத காண்டம் |
|
18. தருசகனோடு கூடியது |
|
போக்கிய பின்றையவன் புனைநகர்
வீதியுட்
கேட்போர்க் கெல்லாம் வேட்கை
யுடைத்தா
மறைத்த லின்றி மறுகுதோ றறைய
|
|
(வயந்தகன்
செயல்)
31 - 33 : அவன் ......... அறைய
|
|
(பொழிப்புரை) அதுகேட்ட வயந்தகன் அங்ஙனமே ஒப்பனை
செய்யப்பட்ட அவ்விராசகிரிய நகரத்தின் வீதியினுள்ளே சென்று ஆங்குக் கேட்கும் நகர
மாந்தர்க்கெல்லாம் பெரிதும் வேட்கையுண்டாகும்படி இச் செய்தியை வெளிப்படையாக
அவ்வீதிகளிலெல்லாம் கூறி அறிவியா நிற்ப; என்க.
|
|
(விளக்கம்) அவன் :
வயந்தகன். முதல் நாள் அச்சுவப் பெருமகனை எதிர் கொள்ளற் பொருட்டு அணி
செய்யப்பட்டமையின் ஆசிரியர் அந் நினைவால் 'புனைநகர் வீதி' என்றார்.
மறைத்தலின்றி - வெளிப்படையாக. மறுகு -
வீதி.
|