உரை |
|
3. மகத காண்டம் |
|
18. தருசகனோடு கூடியது |
|
அகன்பெருந் தானை யரசத்
தாணியுள் 35 நிகழ்ந்த திற்றென
நெடுந்தகை கேட்டு
நன்னாடு நடுக்க முறீஇத்
தன்மேல் ஒன்னா
மன்ன ருடன்றுவரு காலை
வணக்கும் வாயில் காணான்
மம்மரொடு
நினைப்புள் ளுறுத்த நெஞ்சமொ
டிருந்தோற்கு 40 வென்றி மாற்றஞ்
சென்றுசெவிக் கிசைப்பப்
|
|
(தருசகன்
செயல்)
34 - 40 : அகன் ......... இசைப்ப
|
|
(பொழிப்புரை) பெரிய படைத் தலைவர்களையுடைய அரசத்தாணி
மண்டபத்தின்கண் இருந்து முதல் நாள் நிகழ்ந்த செயல் இஃது என்று ஒற்றர்கள் கூறக்
கேட்ட நெடிய புகழையுடைய அத் தருசக மன்னன் தனது நல்ல நாட்டின் கண்ணுள்ள மக்களை
நடுங்கச் செய்து தன்மேல் அப் பகை மன்னர்கள் சினந்து போரிடுதற்கு வந்தபொழுது அப்
பகை மன்னரை வணக்கும் வழியறியாமல் மயக்கத்தோடு பலவும் நினைந்து நினைந்து மயங்கும்
நெஞ்சத்தோடு இருந்தவனுக்கு இந்த வெற்றிச் செய்தி சென்று செவியின்கண் ஒலித்தலாலே;
என்க.
|
|
(விளக்கம்) பெரிய
படைத் தலைவர்களையுடைய அரசத்தாணி மண்டபத்தின்கண் இருந்து முதல் நாள் நிகழ்ந்த
செயல் இஃது என்று ஒற்றர்கள் கூறக் கேட்ட நெடிய புகழையுடைய அத் தருசக மன்னன் தனது நல்ல
நாட்டின் கண்ணுள்ள மக்களை நடுங்கச் செய்து தன்மேல் அப் பகை மன்னர்கள் சினந்து
போரிடுதற்கு வந்தபொழுது அப் பகை மன்னரை வணக்கும் வழியறியாமல் மயக்கத்தோடு பலவும்
நினைந்து நினைந்து மயங்கும் நெஞ்சத்தோடு இருந்தவனுக்கு இந்த வெற்றிச் செய்தி சென்று
செவியின்கண் ஒலித்தலாலே; என்க.
|