உரை |
|
3. மகத காண்டம் |
|
18. தருசகனோடு கூடியது |
|
முறைமையிற் கேட்டு நிறைநீர்
வரைப்பிற் 65 கெட்ட காலையுங்
கேட்டோ ருவப்ப
நட்டோர்க் காற்று நன்ன
ராளன்
வரவெதிர் கொள்கென வாயிலும்
வீதியும்
விரைமலர்ப் பூங்கொடி வேறுபட
வுயரி
வனப்பொடு புணர்ந்த வார்கவுள் வேழம்
70 சினப்போ ரண்ணற்குச் செல்கெனப்
போக்கிக்
|
|
(இதுவுமது)
64 - 70 : நிறை............போக்கி
|
|
(பொழிப்புரை) மேலும் யாழ்வித்தை பயின்று புகழ்படைத்த
வெற்றிவேல் ஏந்திய அவ்வுதயண மன்னன் தானே இந்நகரத்திற்கு வரப்பெற்றேன். ஆதலால்
யான் பண்டு தவம் மிகவும் செய்துடையேன் போலுமென்று கூறித் தன் மகிழ்ச்சியையும்
அவ்வயந்தகனுக்கு உணர்த்தி அம்மன்னனுடைய உடல் நலம் முதலியவற்றையும் செங்கோல்
நலத்தையும் வினவிப் பின்னர்த் தனக்கு இன்னாமை செய்தற்கு வந்த விரிசிகன் முதலிய
மன்னருடைய போராற்றல் மிக்க பெரிய படையினை உதயணன் மறவர் தாக்கிய முறைமையினையும்
அப்படை சிதர்ந்து போகும்படி போராற்றி ஓட்டிய முறைமையினையும் மீண்ட முறைமையினையும்
முறையே கேட்டு, என்க.
|
|
(விளக்கம்) நவின்ற - பழகிய. விறல் - வெற்றி. இவண் - இந்நகரத்திற்கு.
ஏதமின்மை - உடல்மனம் இவற்றிற்குத் தீங்கில்லாமை. நீதி - செங்கோல் முறைமை. இகல்
- போர்.
|