உரை |
|
3. மகத காண்டம் |
|
18. தருசகனோடு கூடியது |
|
கவற்சியொடு போந்த காவலன்
முன்னர்ப்
புகற்சியொடு சேறல் பொருத்த
மின்றெனப்
போற்றுங் கவரியுங் குடையுங்
கோலமும் 75 மாற்றுவன னாகி
மகதவர் கோமான்
இடுமணி யில்லதோர் பிடிமிசை
யேறிப் படுமணி
வாயில் பலரொடும் போதர்
|
|
(தருசகன் உதயணனை
எதிர்கொள்ளச்
செல்லுதல்)
71 - 77 ; குலத்தில் ......... போதர
|
|
(பொழிப்புரை) பின்னர் அவ்வுதயண மன்னன் குலச் சிறப்பினாலே
தன்னோடு ஒப்புடையன் ஆதலாலே மனக் கவலையோடு நம் நகரத்திற்கு வந்த அந்த உதயணனை
எதிர்கோடற்குத் தான் விரும்பிய ஆரவார நீர்மையையுடைய பொருள்களோடே செல்லுதல்
பொருத்தமற்ற செயலாம் என்று கருதி வாழ்த்துக் கூறுவோரும், சாமரையும், கொற்ற வெண்
குடையும், ஒப்பனை செய்து கோடலும், இன்னோரன்ன பிறவும் மாற்றியவனாய் அந்த மகத
நாட்டு மன்னன் மணி கட்டப்படாத ஒரு பிடியானையின் மேல் ஏறி அரசவைச் சுற்றத்தார்
பலர் தன்னைச் சூழ்ந்து வருமாறு ஆராய்ச்சி மணி கட்டிய கோபுர வாயிலின் கட்செல்ல;
என்க.
|
|
(விளக்கம்) நிகர்க்குநன் - ஒப்பானவன். கவற்சி - கவலை. காவலன் -
உதயணன். புகற்சி - விரும்புதற்குரியபொருள். போற்று - வாழ்த்துக் கூறல். கோலம் -
ஒப்பனை செய்து கோடல். இடுமணி - கட்டித் தூங்கவிடும் மணி. படுமணி - ஒலிபடும்
ஆராய்ச்சி மணி.
|