உரை |
|
3. மகத காண்டம் |
|
18. தருசகனோடு கூடியது |
|
வானுய ருலகம் வழுக்குபு
வீழ்ந்த
தேனுயர் நறுந்தார்த் திறலோன்
போலத் 80 தோழர் சூழ வேழ
மேல்கொண்
டுதையண குமரன் புகுதர வோடிச்
|
|
(இதுவுமது)
78 - 81 : வான் ......... புகுதர
|
|
(பொழிப்புரை) வானத்தின்கண் அமைந்த தேவருலகத்தினின்றும்
வழுக்கி விழுந்த தேன்மிக்க நறிய மலர் மாலை யணிந்த ஒரு தேவனைப்போல உதயணகுமரன் தன்
தோழராகிய உருமண்ணுவா முதலியோர் தன்னைச் சூழ்ந்துவர அத் தருசக மன்னன் உய்த்த
யானையின் மேல் ஏறி வாராநிற்ப ; என்க.
|
|
(விளக்கம்) வானுயருலகம் - மேனிலையுலகம். வழுக்குபு - வழுக்கி. திறலோன்
: ஒரு தேவன். தோழர் : உருமண்ணுவா முதலியோர். வேழம் - தருசகன் உய்த்த
யானை.
|