உரை |
|
3. மகத காண்டம் |
|
18. தருசகனோடு கூடியது |
|
டுதையண குமரன் புகுதர
வோடிச்
சிதைபொரு டெரியுஞ் செந்நெறி
யாளர்
கடல்கண் டன்ன வடலருந்
தானையை
இனைய கூட்டமொ டெண்ணா தகம்புக்கு
85 வினைமேம் பட்ட வென்றி
வேந்தனைத்
தெளிவது தீதெனச் சேர்ந்துசென்
றிசைப்ப
|
|
(சிலர்
தருசகனைத்
தடுத்தல்)
81 - 86 : ஓடி..........இசைப்ப |
|
(பொழிப்புரை) அப்பொழுது உண்மை சிதைந்துபோன பொருளை
ஆராய்ந்து அறியும் செவ்விய நெறியை மேற்கொண்டுள்ள தருசகன் அமைச்சர்களுள் வைத்து ஒரு
சிலர் விரைந்து சென்று அம் மன்னனை எய்தி, ''ந்தே ! கடல்போன்ற வெல்லுதற்கரிய
பெரும் படையினை யுடையோய் ! நீ எதிர்வரும் இக் கூட்டத்தை இத்தகைய கூட்டமென்று
ஆராய்ந்துணராமல் அக் கூட்டத்தினுட் புகுந்து ஆட்சித் தொழிலில் மேம்பட்டவனும்
வெற்றியை யுடையவனும் ஆகிய வேற்று வேந்தனை இவ்வாறு தெளிந்துகொள்ளுதல் தீங்கு பயக்கு''
மென்று கூறாநிற்ப; என்க. |
|
(விளக்கம்) செந்நெறியாளர் ஓடிச் சென்று சேர்ந்து இசைப்ப என்க. ஓடி -
விரைந்து. சிதை பொருள் - உண்மை சிதைந்து போன பொருள். செந்நெறியாளர் :
அமைச்சர். தானையை - படையையுடையாய். இனைய - இத்தகைய. வேந்தன்:
உதயணன்.
|