பக்கம் எண் :

பக்கம் எண்:320

உரை
 
3. மகத காண்டம்
 
19. படை தலைக்கொண்டது
 
            வெம்போர் நிகழ்ச்சி யென்கொன்மற் றிதுவென
            வருபடை யொற்றரை வழுக்கி மற்றவன்
            பொருபடை போதரப் புணர்த்த தாகுமென்
            றதுவும் பிறவு மாய்வுழிச் செவ்விதிற்
 
                        (இதுவுமது)
             16 - 19 : வெம்போர்.........ஆய்வுழி
 
(பொழிப்புரை) இவ்வாறு வெவ்விய போர் நிகழ்தற்குக் காரணம் என்னையோ என்று வினவ ஒரோவழி அத் தருசகன் மேல் போருக்கு வந்த படை தனது ஒற்றர் மொழியிற் றவறி அவ்வுதயணனது போர்ப்படை நம்மிடத்தே புகும்படி சூழ்ச்சி செய்து அத் தருசகன் இவ்வாறு நிகழ்வித்த செயலாகும் என்று அப்போர் நிகழ்ச்சி பற்றியும் பிற நிகழ்ச்சிகள் பற்றியும் ஆராயுங்காலத்தே; என்க.
 
(விளக்கம்) போர் நிகழ்ச்சி - உதயணன் மறவர் இரவிற் செய்த போர். அவன் : உதயணன்; தருசகன் எனினுமாம்.