உரை |
|
3. மகத காண்டம் |
|
19. படை தலைக்கொண்டது |
|
றதுவும் பிறவு மாய்வுழிச் செவ்விதிற்
20 பேணி வாழும் பெற்றிய
ராகி
வாணிக வுருவொடு வந்திடைப்
புகுந்த
வீர ராகுவோர் வேறுதிரிந்
தொடுங்கி
ஆரிருண் மறைஇ யருஞ்சின
மழித்தோர்
போந்தில ராதலிற் பொருத்த முடைத்தென |
|
(இதுவுமது)
19 - 24: செவ்விதின்.........உடைத்தென |
|
(பொழிப்புரை) செம்மையாகத் தம்மைப் பேணி வாழுகின்ற தன்மையை யுடையோர் போல வாணிக
உருவத்தோடு வந்து நங்கேளிர் போல நம்முட் புகுந்து கொண்ட மறவர்களே வேறுபட்டு மனந்
திரிந்து நமக்குள் மறைந்து அரிய இருளின்கண் மறைந்து நம்முடைய அரிய வெகுளியை
அழித்தவர் ஆவர் என்று சிலர் கூற, ஒரு சிலர் உண்மையேயாம்! நாம் ஓடி வரும் பொழுது
அவருள் ஒருவரேனும் நம்மொடு வந்திலராதலின் இம்முடிவு மிகவும் பொருத்தமுடைத்தென்று
கூறாநிற்ப; என்க. |
|
(விளக்கம்) பெற்றியர் - தன்மையுடையோர். மறைஇ - மறைந்து நம்மை வென்றோர்
என்றற்கு நாணிச் சினமழித்தோ ரென்றார். |