பக்கம் எண் :

பக்கம் எண்:324

உரை
 
3. மகத காண்டம்
 
19. படை தலைக்கொண்டது
 
           செயிர்ப்பிற் சிறந்தவர் பெயர்ச்சி நோக்கிப்
           படையொற் றாளர் கடுகுபு குறுகிக்
     45    காவலற் கிசைத்துக் கண்டுகை கூப்பி
           வேக மன்னர் மீட்டும்வந் திறுத்த
           வெங்கட் செய்தொழி றன்கட் கூறலும்
           மறுநோய் மக்களி னாழ்ந்த மனத்தன்
           செறுவேல் வேந்தன் செய்வதை யறியான்
 
         (பகைவர் செயலைத் தருசகன் அறிந்து படை திரட்டல்.)
                44 - 49 : படை.........அறியான்
 
(பொழிப்புரை) பகைவர் படைகளை ஒற்றியுணரும் ஒற்றர்கள் விரைந்து வந்து தம்மரசனைக் கண்டு கைகூப்பி வணங்கிக் கூறிப் பகை மன்னர்கள் மீண்டும் வந்து சூழ்ந்துள்ள கண்ணோட்டமில்லாத தீத்தொழிலை அவன்பால் அறிவித்தலாலே, அதுகேட்ட தருசகன் பிணியுற்றுத் தீர்ந்த மக்கள் மீண்டும் அப்பிணி வந்துற்ற காலை வருந்துமாறுபோல வருந்தித் துன்பத்தில் ஆழ்ந்த மனத்தை உடையவனாய்க் கொல்லும் வேலேந்திய அம் மன்னவன் அப்பொழுது செய்வது இன்னது என்று அறியாதவனாய்த் திகைத்து; என்க.
 
(விளக்கம்) பகைவர் படைகளை ஒற்றியுணரும் ஒற்றர்கள் விரைந்து வந்து தம்மரசனைக் கண்டு கைகூப்பி வணங்கிக் கூறிப் பகை மன்னர்கள் மீண்டும் வந்து சூழ்ந்துள்ள கண்ணோட்டமில்லாத தீத்தொழிலை அவன்பால் அறிவித்தலாலே, அதுகேட்ட தருசகன் பிணியுற்றுத் தீர்ந்த மக்கள் மீண்டும் அப்பிணி வந்துற்ற காலை வருந்துமாறுபோல வருந்தித் துன்பத்தில் ஆழ்ந்த மனத்தை உடையவனாய்க் கொல்லும் வேலேந்திய அம் மன்னவன் அப்பொழுது செய்வது இன்னது என்று அறியாதவனாய்த் திகைத்து; என்க.