உரை |
|
3. மகத காண்டம் |
|
19. படை தலைக்கொண்டது |
|
விருத்தி காரரும் வேண்டியது
பெறூஉம்
உரத்தகை யாளரு மொருங்குவந்
தீண்டுக செருச்செய
வலித்தனன் செல்வன் சென்றெனத்
60 தானை யணியத் தலைத்தா
ளணியுள்
யானை யேற்றி யணிமுர சறைதலும்
|
|
(இதுவுமது) 57
- 61 : விருத்தி.........அறைதலும்
|
|
(பொழிப்புரை) விருத்திகாரரும் அவ்வப்போது தாம் வேண்டிய
பொருளைப் பெற்றுக் கொள்ளும் போர் மறவரும் ஒரு சேர ஈண்டு வந்து கூடுவீராக; நம்மரசன்
பகை மன்னர் மேற்சென்று போர் செய்யத் துணிந்தனன் என்று கூறிப் படைகளை அணி
வகுக்கும்படி முன்னின்ற படையணியின்கண் யானையின் மேல் வள்ளுவர் அழகிய முரசினை ஏற்றி
அறைதலாலே; என்க.
|
|
(விளக்கம்) விருத்திகாரர் - போர் செய்தற் பொருட்டு
அரசனளித்த சீவிதம் பெற்றிருக்கும் மறவர். வேண்டியது பெறூஉம் உரத்தகையாளரென்றது -
கூலிபெறும் மறவரை. செல்வன் - அரசன். வலித்தனன் - துணிந்தனன். தலைத்தாளணி - முதல்
படையணி. வள்ளுவர் அறைதலும்; என்க.
|