உரை |
|
3. மகத காண்டம் |
|
19. படை தலைக்கொண்டது |
|
70
மயங்கிதழ்ப் படலை மகதவற் கண்டு
செருச்செய் தானைப் பிரச்சோ
தனன்றன்
பாவையை யிழந்து பரிவு
முந்துறீஇச்
சாவது துணிந்தியான் சேயிடைப்
போந்தனென்
மன்னுயிர் ஞாலத் தின்னுயி ரன்ன
75 அடுத்த நண்புரைத் தெடுத்தனை
யாகத்
|
|
(தான் போர் செய்யச் செல்வதாகச் சொல்லி உதயணன்
வயந்தகனைத் தருசகன்பால் விடுத்தல்.)
70 - 75 : மயங்கி.........ஆக
|
|
(பொழிப்புரை) ''நண்பனே! நீ சென்று மலர் விரவிய தளிர்
மாலையையுடைய மகத மன்னனைக் கண்டு என் கூற்றாகப் பகைவரோடே போர் செய்து வெல்லும்
படையையுடைய பிரச்சோதன மன்னனுடைய மகளாகிய வாசவதத்தையை இழந்து துன்பத்தை
மேற்கொண்டு சாவதனையே துணிந்து யான் சேய்மையின்கண் உள்ள இந் நகரத்திற்கு வந்தேன்.
மன்னுயிர் நிரம்பிய இவ்வுலகத்தின்கண் நீ எனக்கு இனிய உயிர்போன்று அணுகிய
நட்புரிமையை எடுத்துக் கூறி என்னை அத் தாங்கருந் துயரத்தினின்றும் எடுத்தனை. இத்தகைய
நட்புரிமை உடையை ஆதலால்''; என்க.
|
|
(விளக்கம்) இதழ் மயங்குபடலை என்ப. இதழ் - மலர். படலை -
தளிரும் மலரும் விரவிய மாலை. மகதவன் - தருசகன். பிரச்சோதனன் - அவந்தி நாட்டு
மன்னன். பாவை - வாசவதத்தை. பரிவு - துன்பம். சேயிடை - தூரியவிடம். உயிரன்ன நண்பு,
அடுத்த நண்பு என ஒட்டுக..
|