உரை |
|
3. மகத காண்டம் |
|
19. படை தலைக்கொண்டது |
|
வாயன் றாயினும் வந்துகண்
ணுற்றோர்
மேவ வுரைக்கும் மேதகு
வாக்கியம்
வல்ல னாகிய வயந்தக
குமரன்
செல்வன் றலைத்தாட் சென்றுகண் ணெய்தி
105 இறைவன் மாற்றமுங் குறையுங் கூற
|
|
(வயந்தகன்
செயல்) 101
- 105 : வாய்.........கூற
|
|
(பொழிப்புரை) அப்பணி பெற்றவுடனே உண்மையன்றாயினும்
தன்பால் வந்து கேட்போர் அம்மொழி மெய்ம்மையே என்று விரும்பி ஏற்றுக்கொள்ளும்படி
பேசுகின்ற மேம்பாடுடைய சொல் வன்மையையுடைய அவ் வயந்தக குமரன் அத் தருசகன்
திருமுன்னர்ச்சென்று இடம் பெற்றுத் தன் அரசனாகிய உதயணனுடைய மொழியையும்
வேண்டுகோளையும் கூறாநிற்ப; என்க.
|
|
(விளக்கம்) வாய் - உண்மை. மேவ - விரும்ப. மேதகுவாக்கியம்
- மேம்பட்ட தகுதியையுடைய மொழி. செல்வன் - தருசகன். தலைத்தாள் - முன்னிலை.
கண்ணெய்தி - இடம்பெற்று. இறைவன் - உதயணன். குறை -
வேண்டுகோள்.
|