உரை |
|
3. மகத காண்டம் |
|
19. படை தலைக்கொண்டது |
|
மகதவ ரிறைவனுந் தமர்களைத்
தரீஇநமக்
குறுதி வேண்டு முதயண
னுரையிது
மறுமொழி யாதென மந்திர
மாக்கள்
யாதவன் வலித்த தப்பொரு ளறிதல்
110 தீதன் றாதலிற் றெளிந்து
செய்கென
மறுத்தல் செல்லான் வாழி
யவர்நிலை
அழிக்கும் வாயி லறியுந் தானென
ஒன்றின னுரைத்ததை யொன்றுவன னாகி
|
|
(தருசகன்
செயல்)
106 - 113 : மகதவர்.........ஆகி |
|
(பொழிப்புரை) அம்மொழி கேட்ட அம் மகத மன்னனும்
தன் அமைச்சர்களை வரவழைத்து நமக்கு ஆக்கம் செய்தலை விரும்புகின்ற உதயண மன்னன்
சொல்லிவிடுத்த மொழி இஃதாம். இம்மொழிக்கு யாம் கூறுதற்குரிய விடை யாது?
கூறுங்கோள்; என்று அறிவிப்ப, அதுகேட்ட அவ்வமைச்சர்கள் அம் மன்னவன், எந்தப்
பொருளைத் துணிந்து சொல்லி விடுத்தனனோ அந்தப் பொருளை யாமும் ஆராய்ந்து அறிதல்
தீங்கன்றாதலின் அப் பொருளை ஆராய்ந்து தெளிந்து செய்க ! என்று கூறாநிற்ப, அது கேட்ட
அத் தருசகன் அவர் கூற்றை மறாதவனாய், அவ்வமைச்சரோடு ஆராய்ந்துழி அவருள் வைத்து
ஒருவன் அவ்வுதயண மன்னன் அப் பகைவருடைய நிலைமையை அழிக்கும் வழியினை அறிகுவன் என்று
அவ்வுதயணன் வேண்டுகோட்கு இணங்கிக் கூறுதலை அத் தருசகன் மேற்கொள்வானாய் ;
என்க. |
|
(விளக்கம்) தமர் - அமைச்சர். தரீஇ - வரவழைத்து.
மந்திரமாக்கள் - அமைச்சர்கள். வாழி என்றது மகிழ்ச்சியால் உதயணனை
வாழ்த்தியபடியாம். அவ்வமைச்சருள் ஒருவன் அவ்வுதயணன் கருத்தோடு ஒன்றினனாய்
உரைத்ததனைத் தருசகன் ஒன்றுவனனாகி என்க. |