| உரை |
| |
| 3. மகத காண்டம் |
| |
| 19. படை தலைக்கொண்டது |
| |
அருஞ்சின யானையும் புரவியு
மமைந்த 115 இருஞ்சின விளையரும்
வருகென வேவி
|
| |
(இதுவுமது)
114 - 115 : அருஞ்சின.........ஏவி |
| |
| (பொழிப்புரை) அம் மன்னர் பெருமான் அப்பொழுதே
கிட்டுதற்கரிய வெகுளியையுடைய நம் யானைப் படைகளும் குதிரைப் படைகளும் போர்க்குத்
தகுதியான பெரிய வெகுளியையுடைய இளமையையுடைய காலாட் படைஞரும் வருக! என்று ஏவலர்களை
விட; என்க. |
| |
| (விளக்கம்) யானை - யானைப் படை. புரவி - குதிரைப் படை.
இளையர் - காலாட்படை |