உரை |
|
3. மகத காண்டம் |
|
19. படை தலைக்கொண்டது |
|
130 தந்தை
பெருங்கிளை காரண
மாக முந்து
மப்படை முருங்கத்
தாக்கி
வந்த வேந்தன் வலித்ததுந்
தங்கைக்குச்
சென்ற குமரன் முந்தைக்
கூறிய மாற்றமு
மனத்தே யாற்றுளி புடைபெயர்ந்
135 தொலிக்குங் கழற்கா லுதயண
குமரன்
வலிக்கும் பொருண்மேல் வலித்தன னாகித்
|
|
(தருசகன்
எண்ணல்)
130 - 136 : தந்தை.........ஆகி |
|
(பொழிப்புரை) அவ்வேண்டுகோள் கேட்ட மகதமன்னன்
தன் தந்தையோடு உதயணன் தந்தை கொண்டிருந்த பெரிய கேண்மையைக் காரணமாகக்
கொண்டு முன்னரும் அப்பகையரசர் படைகளை அழியும்படி தாக்கித் தன்பால் வெற்றியோடு
வந்தவனாகிய அவ்வுதயண மன்னன் கூறிவிடுத்த செய்தியையும், தன் தங்கையாகிய
பதுமாபதியின் பொருட்டுத் தன் நகர்க்கு வந்த இளைஞனாகிய அச்சுவப் பெருமகன் தன்
முன்னிலையிலே வந்து கூறிய மொழிகளையும் நெஞ்சத்துட் கொண்டு சீர்தூக்கி இடம்
பெயர்ந்து ஆரவாரிக்கின்ற வீரக்கழலையுடைய காலையுடைய உதயணகுமரன் துணிந்த பொருளையே
தானுந் துணிந்தவனாய் ; என்க. |
|
(விளக்கம்) தந்தை - தன் தந்தையும் உதயணன் தந்தையும்
என்க. முந்தும் - முன்னரும். அப்படை - அப்பகைவர் படை. முருங்க - அழிய. வந்த வேந்தன்
- உதயணகுமரன். சென்ற குமரன் - கேகயத்தரசன். முந்தை - தன்முன்னிலையில்.
ஆற்றுளி - முறைப்படியே. ஆராய்ந்து என ஒரு சொல்
வருவிக்க. |