உரை |
|
3. மகத காண்டம் |
|
19. படை தலைக்கொண்டது |
|
மட்டலர்
பைந்தார் மகதவன்
வயந்தகற்
குற்ற நண்பி னுயிர்போ
லுதயணற்
கிற்றிது கூறுமதி யிளையோள் பொருட்டா
150 வந்திவ ணிருந்த வெந்திறல்
வீரன்
தன்னொடு வந்து மன்னரை
யோட்டிப்
போதரத் துணிந்தன னேத
மின்றி
ஆகும் வாயி லெண்ணி
யப்படை போக
நூக்கல் பொருளெனக் கூறி 155
மீட்டவற் போக்க வேட்பனன் விரும்பியவன்
|
|
(தருசகன் வயந்தகனுக்குக்
கூறலும் அவனை
விடுத்தலும்)
147 - 155 : மட்டு............போக்க
|
|
(பொழிப்புரை) தேனொடு மலர்ந்த பசிய
மலர்மாலையையணிந்த அம் மன்னவன் வயந்தகனை நோக்கி, ''நண்பனே ! நீ சென்று
என்னுடன் உயிர் போன்று கேண்மை கொண்டுள்ள அவ்வுதயணமன்னனுக்கு யான் கூறும்
இச்செய்தியைச் சொல்லுவாயாக!'' என் தங்கையாகிய பதுமாபதியை மணம் செய்து கோடற்
பொருட்டு இங்கு வந்திருக்கும் வெவ்விய ஆற்றலுடைய அச்சுவப் பெருமகன் அவ்வுதயணனோடு வந்து
போர்க்களத்திலே அப்பகை மன்னர்களைத் தாக்கிப் புறங்கண்டு மீள்வதற்குத்
துணிந்துள்ளான் ஆதலின் அவனொடுஞ் சென்று குற்றமின்றி வெற்றியுண்டாகும் வழிகளை
எண்ணித் துணிந்து அவ்வுதயணன் கருத்தின்படியே அப்பகை மன்னர் படைகள்
உடைந்தோடிப் போம்படி தாக்குதலே யான் கருதிய பொருளுமாகும் என்று கூறி அவ்வயந்தகனை
மீட்டும் விடுப்ப; என்க.
|
|
(விளக்கம்) மட்டு - தேன். மகதவன் - தருசகன். இற்றிது -
இது; மதி : முன்னிலையசை, இளையோள் : பதுமாபதி. வீரன் : கேகயத்தரசன். தன்னொடு -
உதயணனோடு. மன்னரை - பகை மன்னரை. ஏதம் - குற்றம் ; துன்பமுமாம். வாயில் - வழி.
நூக்கல் - தாக்கல். அவற்போக்க - வயந்தகனை
விடுக்க.
|