உரை |
|
3. மகத காண்டம் |
|
19. படை தலைக்கொண்டது |
|
கோயின் முற்றத் துய்த்தலின்
வாய்மொழி
உதயணன் றன்மாட் டுய்க்க
விவற்றொடு
பொருபடைக் குதவும் புரவியும் புரவியொடு
180 செருவமர் மாந்தருஞ் செல்க
விரைந்தென ஒன்னா
ரோட்டிய வுதயணன்
கோயிற்
பொன்னார் முற்றம் புகுந்துடன் றுவன்ற
|
|
(குதிரை
முதலியன)
177 - 182 : வாய்மொழி.........துவன்ற |
|
(பொழிப்புரை) அது கண்ட தருசகன் அம்மறவர்களை
நோக்கி இந்த யானைப் படைகளை வாய்மையாளனாகிய உதயண மன்னன் பால் செலுத்துவீராக !
இந்த யானைகளோடு போர்செய்யும் படைகளுக்கு உதவுகின்ற குதிரைகளும் குதிரையில் ஏறிப்
போர் செய்யும் மறவர்களும். விரைந்து செல்க ! என்று கட்டளையிடுதலாலே
அப்படைகளெல்லாம் பகைவர்களைப் புறங்கண்ட அவ்வுதயணமன்னன் எழுந்தருளியிருக்கும்
அரண்மனையின் பொற்றளமிட்ட முற்றத்தின்கண் புகுந்து ஒருங்கே நெருங்காநிற்ப ;
என்க. |
|
(விளக்கம்) பொருபடை, வினைத்தொகை. புரவியொடு செருவமர்
மாந்தர் - குதிரைப் படை மறவர். துவன்ற -
நெருங்க. |