உரை |
|
3. மகத காண்டம் |
|
19. படை தலைக்கொண்டது |
|
அருந்திறல் யானை யமைந்தது
நாடி
இரும்பிடர்த் தலையிற் பெருந்தகை மேல்கொள
185 உயர்ந்த வூக்கத் துருமண்
ணுவாவும்
வயந்தக குமரனும் வாய்மொழிந்
தாய்ந்த
உயர்ச்சி யுள்ளத் திசைச்சனு
மேனைத்
தடவரை மார்பி னிடவக
னுளப்பட
எந்நூற் கண்ணு மிடம்பா டுடைய 190
முந்நூற் றறுவர் மொய்த்தொருங்
கீண்டி
வலம்படு நமக்கென வலங்கொண் டேற
|
|
(படைகளின்
புறப்பாடு) 183
- 191 : அருந்திறல்.........ஏற
|
|
(பொழிப்புரை) இவ்வாறு தாம் ஏறுதற்குரிய யானைகள்
அமைந்ததனை ஆராய்ந்து அவற்றுள் சிறந்த தொரு பெரிய யானையினது பெரிய தலையின்கண்
உதயண நம்பி ஏறாநிற்ப, உயர்ந்த ஊக்கத்தையுடைய உருமண்ணுவாவும் வயந்தககுமரனும்
எக்காலத்தும் உண்மையே பேசி நுண்பொருள்களை ஆராய்ந்தமையாலே உயர்வுடைய தாகிய
உள்ளத்தையுடைய இசைச்சனும் ஏனைய பெரிய மலை போன்ற மார்பினையுடைய இடவகனும் உள்ளிட்ட
எல்லா நூல்களிடத்தும் பயின்று விரிந்த உள்ளத்தையுடைய முன்னூற்றறுவரும் எழுந்து வந்து
நெருங்கிய ஏனைய யானைகளின் மேல் நமக்கு வெற்றியுண்டாகும் என்று கூறிக் கொண்டு
அவற்றை வலம் வந்து ஏறாநிற்ப ; என்க.
|
|
(விளக்கம்) பெருந்தகைதனக்கென அருந்திறல் யானை அமைந்தது
நாடி என்க. பிடர்த்தலை - தலை; வேற்றுமையுருபு. பெருந்தகை - உதயணன். நுண் பொருளை
ஆய்ந்த என்க. எந்நூற் கண்ணும் பயின்று இடம் பாடுடைய என்க. வலம் - வெற்றி.
வலங்கொண்டு - வலம் வந்து, ஊர்திகளை வலங்கொண்டேறுதல்
மரபு.
|