உரை |
|
3. மகத காண்டம் |
|
19. படை தலைக்கொண்டது |
|
ஒழிந்த
மாந்தர் பொலிந்துபுறங்
காப்ப
இறையுடைச் செல்வ மியையத்
தழீஇக்
குறைபட லில்லாக் கொற்றமொடு போந்து
195 முரசுஞ் சங்கு முருடு
மொலிப்ப
அரசப் பெருங்கொடி யொருவலத்
துயரி எழுந்த
பொழுதிற் றழங்குரன்
முரசிற்
றருசக குமரன் றான்பின்
வந்து
கேகயத் தரசனைக் காவல் போற்றென
200 ஓம்படை கூறி யாங்கவ
ணொழியப்
|
|
(இதுவுமது)
192 - 200 : ஒழிந்த.........ஒழிய
|
|
(பொழிப்புரை) எஞ்சிய மறவர்கள் அழகுற நின்று
புறங்காத்து வர அவ்வரசச் செல்வத்தை நன்கு பொருந்துமாறு ஏற்றுக்கொண்டு
உதயணமன்னன் குறைதலில்லாத வெற்றியோடு வந்து முரசமும் சங்குகளும் முருடுகளும்
முழங்காநிற்ப, அம்மகத மன்னனுக்குரிய அடையாளக் கொடியாகிய பெரிய கொடியைத் தனக்கு
வலப்பக்கத்தே உயர்த்திக் கொண்டு புறப்பட்ட பொழுதில், முழங்காநின்ற முரசத்தோடு
அத்தருசக மன்னன் அவ்வுதயணன் பின்னர் வந்து அம்மன்னனுக்குக் கேகயத்தரசனைக் காட்டி,
''பெருமானே ! இம் மன்னனை நீ குறிக்கொண்டு பாதுகாத்தருளுக'' என்று அடைக்கலங் கூறி
அவ்விடத்தினின்றும் நகர்க்குச் செல்லா நிற்ப ;
என்க.
|
|
(விளக்கம்) ஒழிந்த மாந்தர் - எஞ்சிய மறவர். இறையுடைச்
செல்வம் - அரசச் செல்வம். முருடு - ஒருவகைத் தோற் கருவி. அரசப் பெருங்கொடி -
அம்மகத நாட்டு அரசியலுக்குரிய அடையாளப் பெருங்கொடி. உயரி - உயர்த்து. தழங்குரன் முரசு
- தழங்குகுரல் முரசு ; கெடுதல் விகாரம். ஓம்படை -
அடைக்கலம்.
|