உரை |
|
3. மகத காண்டம் |
|
19. படை தலைக்கொண்டது |
|
புல்லார்
பாடியிற் குறுகலி னொல்லென 210
ஒற்றர் மாற்றம் பெற்றுமுன்
னிருந்தோர்
வேழமும் புரவியு மூழூழ்
விரைஇக்
காழ்மண் டெஃகமொடு காற்படை
பரப்பிப்
புண்ணிய முடையம் பொருமிவ
ணின்னரை நன்னர்ப்
பெற்றே நாமெனக் கூறி
|
|
(பகைவர்
செயல்) 209
- 214 : ஒல்லென.........கூறி
|
|
(பொழிப்புரை) தம்முடைய ஒற்றர் வாயிலாய் உதயணன்
படை எழுச்சியினை அறிந்து கொண்டு போராற்றுதற்கு முற்பட்டிருந்த பகைவர் தாமும்
தம்முடைய யானைப்படைகளையும் குதிரைப் படைகளையும் முறை முறையாக விரவி நிறுத்தி
வைத்துக் காம்பிலே தைக்கப்பட்ட வேற்படைகளை யேந்திய காலாட் படைகளைப்
பொலிவுற யாண்டும் பரப்பி ஒல்லென்று ஆரவாரித்து இப்போர்க்களத்தே இத்தகைய சிறந்த
மறவர்களை யாம் நன்கு பெற்றேம் ; யாம் மிகவும் புண்ணியம் உடையேம் என்று கூறிக்
களித்து ; என்க.
|
|
(விளக்கம்) ஒல்லென - குறிப்பு மொழி. முன்னிருந்தோர் -
போருக்கு முற்பட்டிருந்த பகைவர். ஊழூழ் - முறைமுறையாக. விரைஇ - விரவி,
காழ்மண்டெஃகம், காம்பிலே தைத்தவேல். "காழ்மண்டெஃகம்" (மலைபடு 129) காற்படை -
காலாட்படை. அப்படை மறவர் மறச்சிறப்புடைமை பகைவரைக் கண்டுழி உவத்தலால்
அறியப்படும், இன்னர் என்றது இத்தகைய சிறந்த மறவரை என்பதுபட நின்றது. இவண் -
இப்போர்க்களத்தில், நன்னர் - நன்கு.
|