பக்கம் எண் :

பக்கம் எண்:35

உரை
 
3. மகத காண்டம்
 
3. இராசகிரியம் புக்கது
 
         
            உயர்மிசை யுலகி னுருகெழு பன்மீன்
           அகவயிற் பொலிந்துத னலங்குகதிர் பரப்பி
           நிலப்புடை நிவத்தரு நிறைமதி போலக்
     15    காட்சி யியைந்த மாட்சித் தாகிச்        
 
           (இராசகிரியத்தின் சிறப்பு)
          12 - 15 ; உயர்...........ஆகி
 
(பொழிப்புரை) (இராசகிரியம் ! இராசகிரியம் ! என்று எட்டுத்
  திசைகளினும் மாந்தர் கிளந்தெடுத்துக் கூறிப் புகழாநின்ற
  இராசகிரிய நகரமானது (114-15) மேனிலை யுலகத்தின் கண்ணே
  அழகு பொருந்திய  பலவாகிய விண்மீன்களினிடையே
  பொலிவுற்றுத் திகழ்ந்து அசைகின்ற தனது நிலாவொளியை
  உலகெலாம் பரப்பிக்கொண்டு நிலகிருப்பப் பல்வேறு மணிகளையும்
  விரவி முன்புறத்தே வளைத்து அணியப்பட்ட பொன்னாலியன்ற
  மேகலையணியையும், நீராகிய பசிய ஆடையினையும் குறையாத
  பிற செல்வங்களையும் தனக்கு அணிகலன்களாகப் பூண்டுகொண்டு
  கிடந்த கண்டவர் அஞ்சி நடுங்கும்படி செய்கின்ற ஆழ்ந்த குற்றமற்ற
  ''அகழி'' என்னும் அல்குலினையும் பகைவராலே ஒரு காலத்தும்
  கைப்பற்றி ஆட்சி செய்யப்படாததும் பொருத்தமான  பல்வேறு
  மணிகளையும் பதித்த ஒள்ளிய முகடு என்னும் நுனியையுடையதும்
  நலத்தினாற் றகுதிபெற்றதும் இலக்கணமமைந்ததும் ஆகிய ''ஞாயில்''
  என்னும் இளமையுடைய முலையினையும் என்க.
 
(விளக்கம்) பாம்புரி என்னும் மேகலையினையும்,
  ( நீராகிய ) பைந்துகிலையும், தனக்கு அணியாக உடுத்த அகழ்
  என்னும் அல்குலையும் ஞாயிலாகிய முலையினையும் என்க.
  பத்திரம்- அழகு. பாம்புரி - ஆளோடி என்னும் ஒரு மதிலுறுப்பு.
  அத்தக - அழகாற் றகுதியுண்டாக, கலாஅய் - விரவி என்க.
  பொற்படைப் படுகால்-பொன்னாலியன்ற மேகலையணி. நீராகிய
  பைந்துகில் என்க. கண்டவர். நடுக்கும் அகழி; துகில் அணியாக
  உடுத்திருந்த அகழி என்க. அகழியாகிய அல்குல் என்க.
  மாற்றோர்-பகைவர். ஏற்ற-பொருத்தமான.
  முகடாகிய உச்சி என்க. உச்சி - முலை. ஞாயில் -ஒரு மதிலுறுப்பு