பக்கம் எண் :

பக்கம் எண்:351

உரை
 
3. மகத காண்டம்
 
20. சங்கமன்னர் உடைந்தது
 
         
     25    அரிபெய் புட்டி லார்ப்பக் கருவியொடு
           மேலோ ருள்ளம் போல நூலோர்
           புகழப் பட்ட போர்வல் புரவி
           இகழ்த லின்றி யேறிய வீரர்
           வெம்முரண் வீரமொடு தம்முட் டாக்கவும்
 
                      (இதுவுமது)
               25 - 29 : அரிபெய்.........தாக்கவும்
 
(பொழிப்புரை) பரல் பெய்யப் பட்ட செச்சை முழங்கக் கடிவாளத்தோடு தம்மேல் ஏவியுள்ள தலைவர்கள் மனம் போலக் குறிப்புணர்ந்து இயங்குவனவும், குதிரை நூல் வல்லவரால் புகழப்பட்டனவும், போர்த் தொழிலில் வன்மையுடையனவும் ஆகிய சிறந்த குதிரைகளின் மேலே இகழ்ச்சியின்றி ஏறிய மறவர்கள் வெவ்விய வலி மிக்க வீரத்தோடு தம்முள் போராற்றா நிற்பவும்; என்க.
 
(விளக்கம்) அரி - பரல். புட்டில் - செச்சை. ''அரிபெய் புட்டிலார்ப்ப........பாய்பரி நன்மா'' (அகநா. 122 : 19-20), ''பொன்னரிப் புட்டிலுந் தாரும் பொங்குபு. முன்னுருத் தார்த்தெழப் புரவி மொய்த்தவே'' (சீவக. 2219). கருவி - கடிவாளம். மேலோர் - ஏறிய வீரர், மேலோர் உள்ளம்போல என்னும் இதனொடு, ''ஏவலிளிவெனக் கண்ணிப்பாகன், மனக்க ணியக்கம் பூண்டமானத்து'' (பெருங்); ''உள்ளம்போற் செல்வ'' (சீவக. 1771); ''உள்ளம் போல வுற்றுழி யுதவும், புள்ளியற்கலிமா'' (தொல் - கற்பு. சூ. 53).