பக்கம் எண்:352
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 20. சங்கமன்னர் உடைந்தது | | 30
போர்ப்பறை முழக்கினு மார்ப்பினு
மழன்று கார்ப்பெய
லருவியிற் கடாஞ்சொரி கவுள
கொலைநவில் பல்படை கொண்ட
மாட்சிய
மலைநிமிர்ந் தன்ன மழகளிற்
றெருத்திற்
சிலையுங் கணையுஞ் சீர்ப்பமை
வட்டும் 35 மழுவுங் குந்தமு
முழுமயிற் பீலியும்
சங்கமுங் கணையமுஞ் சத்தியும்
வாளும்
பிண்டி பாலமும் பிறவு
மெல்லாம் தண்டாக்
கருவி தாந்துறை போகிய
வண்டார் தெரியன் மறவர் மயங்கி
40 அருநில மதிரத் திரிதர
லோவா வீதி
வட்டமொ டாதிய
கதிவயிற் பாழி
பயிற்றி நூழி லாட்டவும்
| |
(யானைவீரர்) 30 - 42 : போர்.........ஆட்டவும்
| | (பொழிப்புரை) இனி, போர்க்களத்தின் கண் முழக்கப் படும் பறை முழக்கத்தாலும்,
மறவர்கள் ஆரவாரத்தாலும், சினங்கொள்வனவும், கார்காலத்து மழையினாலே
மலையினின்றும் வீழும் அருவி போன்று மத நீரைச் சொரிகின்ற கவுளையுடையனவும் கொலைத்
தொழில் கருதிய பல்வேறு படைக்கலங்களை மேற் கொண்ட மாண்புடையனவும், மலை
நிமிர்ந்தாற் போன்றனவும் ஆகிய இளமையுடைய களிற்றி யானைகளின் பிடரின்கண்
ஏறியிருந்து வில்லும் அம்புகளும், சிறப்பமைந்த வட்டும் மழுவும் குந்தமும் பெரிய மயிற்
பீலியும் சங்கமும் கணையமும் வேலும் வாளும் பிண்டியும் பாலமும் பிறவும் ஆகிய குறைவில்லாத
போர்க்கருவிகளைக் கொண்டு போர் செய்து பயின்று பயின்று அத்துறையில் முதிர்ந்த,
வண்டுகள் ஆரவாரிக்கின்ற வாகை மாலை புனைந்த இரு படையினுமுள்ள யானை மறவர்கள் தம்முள்
கை கலந்து அரிய நிலம் அதிரும்படி சுற்றுவதன் கண் ஒழியாதவராய் வீதியும் வட்டமும்
உள்ளிட்ட யானையினது செலவின்கண் வலிமையுண்டாகச் செலுத்தித் தத்தம் பகைவரைக்
கொன்று குவியா நிற்பவும்; என்க.
| | (விளக்கம்) அழல்வது
கடாம் சொரிதற்கு ஏதுவன்மையின் அழல்வனவும் என ஓதுக. கார்ப்பெயல் - கார்ப்பருவ மழை.
கடாம் - மதம். நவில் - நவின்ற, கருதிய என்க. சிலை - வில். சீர்ப்பு - சிறப்பு.
வட்டு - ஒருவகைப் படைக்கலம். மயிற்பீலி - மயிலின் குரல் போன்ற ஒலியையுடைய சிறு
சின்னம். கணையம் - தண்டு. சக்தி - வேல். ஓவா - ஓவாமல். வீதி, வட்டம் என்பன
யானையின் செலவு வகைகள். பாழி - வலிமை. நூழிலாட்ட - கொன்று
குவிக்க.
|
|
|