பக்கம் எண் :

பக்கம் எண்:357

உரை
 
3. மகத காண்டம்
 
20. சங்கமன்னர் உடைந்தது
 
         
     75    அலைகடல் வெள்ள மலைய வூழி
           உலக மாந்தரிற் களைகண் காணார்
           ஒண்செங் குருதியிற் செங்கணிப் போரால்
           நீலக் கொண்மூ நீர்த்திரைப் பெய்வதோர்
           கோல மேய்ப்பக் கருந்தலை வீழவும்
 
                     (இதுவுமது)
               75 - 79 : அலை.........வீழவும்
 
(பொழிப்புரை) அலையையுடைய கடலினது வெள்ளம் புகுந்து பொராநிற்ப ஊழி முடியுங் காலத்தே உலகின்கண் தமக்குப் புகலிடம் காணமாட்டாத மக்களைப் போல, அக்களத்தின்கண் சிவந்த குருதியின்கண் (செங்கணிப் போரால் ?) நீல நிறமுடைய முகில் குருதி நீரைக் கடலின்கண் பெய்வதாகிய ஒரு காலம் வந்தது போலக் கரிய தலைகள் அற்றுக் குருதி நீரைப் பொழிந்து கொண்டு அக் குருதிக் கடலில் வீழாநிற்பவும்; என்க.
 
(விளக்கம்) ஊழி - ஊழிமுடிவின்கண் என்க. களை கண் காணார். புகலிடம் காணாத. நீலக் கொண்மூ - நீல நிறமுடைய முகில். நீர் - குருதி நீர் என்க. கொண்மூ - குருதி பொழியும் கருந்தலைக்கு உவமை என்க.