உரை |
|
3. மகத காண்டம் |
|
20. சங்கமன்னர் உடைந்தது |
|
வார்தளிர்ப் படலை
வத்தவர்
பெருமகன் எலிச்செவி
யரசன் றம்பி யேறிய
கொலைப்பெருங் களிற்றி னெருத்தத்துப்
பாய்ந்தவன் 90 தம்முன் காணத்
தலைதுமித் திடாது
நின்னின் முடியுமெங் கரும
மீண்டெனக் கடுத்த
கட்டுரை யெடுத்தனன் கச்சிற்
றிண்டோள் கட்டிய வென்றி நோக்கி
|
|
  (உதயணன்
முதலியோர்செயல்) 87
- 93 : வார்.........நோக்கி
|
|
(பொழிப்புரை) நெடிய தளிராலியன்ற மாலையினையுடைய வத்தவமன்னனாகிய உதயணன்
பகைமன்னருள் வைத்து எலிச்செவியரசனுடைய தம்பி ஏறிய கொலைத் தொழிலையுடைய பெரிய
களிற்றியானையின் பிடரின்கண் தாவி அவனுடைய தமையன் காணும்படி அவனுடைய தலையினை
அரிந்திடாமல், ''ஏடா - நின்னைக் கைப்பற்றுவதனாலே எங்கள் காரியம் இங்கு நன்கு
நிறைவேறுவதாம்'' என்று அச்சந்தரும் ஒரு மொழியை எடுத்துக் கூறிக் கச்சினாலே அவனது
திண்ணிய தோளைப் பிணித்த வெற்றிச் செயலைக் கண்கூடாகப் பார்த்தும்;
என்க.
|
|
(விளக்கம்) வார் - நெடிய. தளிர்ப்படலை - மலரோடு தளிர் விரவிப் புனைந்த
மாலை. எருத்தத்து - பிடரியின்கண். தம்முன் - தமையன். துமித்திடாது - துணித்திடாமல்.
கடுத்த கட்டுரை - அச்சந்தரும் மொழி; நோக்கியும்
என்க.
|