உரை |
|
3. மகத காண்டம் |
|
3. இராசகிரியம் புக்க |
|
சித்திரக்
கைவினை செறிந்த
கோலத்துப்
பத்திரப் பாம்புரி யத்தகக்
கலாஅய்
முற்பட வளைஇய பொற்படைப்
படுகாற்
கண்டவர் நடுக்குங் குண்டகழ்ப் பைந்துகில்
20 தண்டாச் செல்வமொடு தனக்கணி
யாக
உடுத்துவீற் றிருந்த வடுத்தீ
ரல்குல்
மாற்றோர் நுகரப் படாஅ
தேற்ற
பன்மணி பயின்ற வொண்முகட்
டுச்சி
நலத்தகு ஞாயி லிலக்கண விளமுலைப்
|
|
(இதுவுமது)
16 - 24 பொறி.........முகத்து
|
|
(பொழிப்புரை) பொறியையுடைய
நிலையோடு பொருந்திய பொருத்து -வாயுடைய பெரிய இரட்டைக் கதவுகளும்,
அப்பெருங் கதவின்கண்ணே செறித்துச் செய்யப்பட்ட- சித்திரத்
தொழிலையுடைய சிறு கதவுகளும் ஆகிய உறுதியாக அமைக்கப்பட்ட பொருத்தமான
அணிகலன்களையும் வல்லவர்களாலே இயற்றப்பட்ட பிறசெல்வத்
தொகுதியோடே நுண்ணிய நன்மையுடைய தொழில் அழகோடு கூடி உயர்ந்து ஞாயிற்று
மண்டிலத்தின் இயக்கத்தையும் தவிர்க்கின்ற கோபுரம் என்னும்
ஆராய்தற்குரிய நன்மையுடைய அழகிய முகத்தையும் என்க.
|
|
(விளக்கம்) பொறி-இயந்திரம்;இலச்சினையுமாம், போர்-பொருத்தல்- செறிநிலை யமைந்த
சித்திரப் புதவு என்றது பெருங்கதவின்கண் அமைக்கப்பட்ட சிறுகதவுகளை.
புதவு-கதவு, பணதி-அணிகலன், இதனைப் பணிதி என்றும் வழங்குப. தீயழற்
செல்வன்-ஞாயிறு, வாயின்மாடம்-கோபுரம், பெருங்கதவும் புதவும்
ஆகிய பணதியையும் வாயின் மாடமாகிய முகத்தையும் என்க.
|