உரை |
|
3. மகத காண்டம் |
|
20. சங்கமன்னர் உடைந்தது |
|
பொருமுரட் படையொடு மயங்கிய
பொழுதவன்
அரணக் கருவி யழிய
வாங்கிக்
கரண வகையாற் கண்ணிமைப்
பளவில்
மாசில் விழுச்சீர்க் கேகயத் தரசன்
105 ஆசில் பைந்தலை யரிந்துநிலஞ்
சேர வீசிய
வாளினன் விறலோர்ச் சவட்டி
|
|
(இதுவுமது) 100
- 106 : இருவரும்.........சவட்டி
|
|
(பொழிப்புரை) அவ்வுருமண்ணுவாவும் கேகய மன்னனுமாகிய இருவரும் ஒன்று கூடி எலிச்
செவியரசனுடைய போர் வலிமை மிக்க படையோடு கலந்த காலத்தில் அந்த எலிச்
செவிமன்னன் ஒரு நொடிப் பொழுதில் குற்றமற்ற சிறப்பும் புகழும் உடைய கேகயத் தரசனுடைய
கவசம் அழியும்படி தன் அம்புகளானே அகற்றித் தனது தொழில் வன்மையால் குற்றமற்ற அக்
கேகய மன்னனுடைய பசிய தலையை அரிந்து நிலத்திலே வீழ்த்தும்படி தனது வாளை வீசிப்
பின்னரும், அவன் மருங்கே நின்ற மறவர்களையும் கொன்று வீழ்த்தி;
என்க.
|
|
(விளக்கம்) மயங்கிய பொழுது - கலந்த காலத்தில், அவன் : எலிச் செவியரசன்.
அரணக் கருவி - கவசம். வாங்கி - நீக்கி. கரண வகை - போர்ச் செயல் வகை.
விழுச்சீர் - சிறந்த புகழ். ஆசு - குற்றம். விறலோர் - கேகய மன்னன் மறவர். சவட்டி
- கொன்று வீழ்த்தி.
|