உரை |
|
3. மகத காண்டம் |
|
20. சங்கமன்னர் உடைந்தது |
|
120 கடும்புன னெருங்க வுடைந்துநிலை
யாற்றா உப்புச்
சிறைபோ லுண்ணெகிழ்ந் துருகி
வெப்ப மன்னர் வீக்கஞ்
சாய உடைந்துகை
யகலவவ ருரிமை
தழீஇக் கடந்தலை
கழித்துக் கடுவா யெஃகமொ 125
டிகலாட் படுகளத் தகலம ராயத்
துதயண குமர னுற்றோர்
சூழ விசய முரசொடு
வியனக ரறிய மகத
மன்னற் குகவை போக்கலிற்
|
|
(இதுவுமது) 120
- 128 : கடும்.........போக்கலின்
|
|
(பொழிப்புரை) அப்பகைவர் படைப் பெருக்கம் மிக்க வெள்ளம் தன்னை நெருக்குதலாலே
உடைந்து நிற்றலாற்றாத உப்பினாற் கட்டிய அணைபோல உள்ளம் நெகிழ்ந்து உருகி
ஓடாநிற்ப, அங்ஙனம் உடைந்தோடுகின்ற அப்பகை மன்னர் கைவிட்டுப் போன
பொருள்களையெல்லாம் உதயண மன்னன் கைப்பற்றிக் கொண்டு தனது கடமையிலே தலைநின்று
செய்து கழித்து வடுப்பட்ட வாயையுடைய படைக்கலங்களோடே பகை மறவர்கள் இறந்துபட்ட
களத்தின் கண்ணே போரொழிந்த உதயண மன்னன் மறவர்கள் வந்து தன்னைச் சூழாநிற்ப,
வெற்றிமுரசம் முழக்குதலோடே அகன்ற இராசகிரிய நகரத்து வாழ்கின்ற மாந்தர் அறியும்படி
அம்மகத நாட்டு மன்னனாகிய தருசகனுக்கு இவ்வெற்றிச்செய்தியைக் கூறும்படி தூது விடுதலாலே;
என்க.
|
|
(விளக்கம்) உப்புச்சிறை - உப்பாலிட்ட அணை. வெப்பமன்னர் - பகைமன்னர்,
அவர் - அப்பகை மன்னர். உரிமை - உரிய பொருள்கள். கடம் - கடமை. கதுவாய் யெஃகம் -
வடுப்பட்ட வாயையுடைய படைக் கலங்கள். இகலாள் - பகை மறவர். அமரகல் ஆயம் என மாறுக.
ஆயம் - கூட்டம். விசைய முரசம் - வெற்றி முரசம். நகர் - இராசகிரியம். உகவை -
மகிழ்ச்சிச் செய்தி.
|