உரை |
|
3. மகத காண்டம் |
|
20. சங்கமன்னர் உடைந்தது |
|
ஆசில் செங்கோ
லவந்தியன் மடமகள் 165 வாசவ
தத்தையிவன் வலியொடு புணர்ந்த
செருவடு தோண்மிசைச் சேர்ந்தனள்
வைகும் திருவில
ளாதலிற் றீப்பட்
டாளெனப் படுசொன்
மாற்றந் தெளிந்த
பரிவினர் தொடிகெழு
தோளி திருவிழிப் போரும்
|
|
(வாசவதத்தையை
இகழ்தல்) 164
- 169 : ஆசில்............இழிப்போரும்
|
|
(பொழிப்புரை) இனி அம்மாந்தருள் ஒருசிலர், ''குற்றமற்ற செங்கோலையுடைய அவந்தி
நாட்டரசனாகிய பிரச்சோதன மன்னனுடைய இளமகளாகிய வாசவதத்தை இப்பெருமானுடைய ஆற்றலொடு
புணர்ந்த போரில் வல்ல தோளின் மீது சேர்ந்து நீடூழி வாழ்வதற்குரிய பாக்கியம்
உடையள் அல்லளாதலின் தீயினுள்ளகப்பட்டு இறந்தாள் என்னும் அச்சொல்லின் கருத்தினைத்
தெளிந்தமையால் உண்டாகிய இரக்கத்தோடு வளையலணிந்த தோளையுடைய அப் பெருந்தேவியினது
செல்வத்தை இகழ்ந்து கூறுவோரும்; என்க
|
|
(விளக்கம்) ஆசு - குற்றம். அவந்தியன்; பிரச்சோதனன். திரு - பாக்கியம்.
தீப்பட்டாள் - தீயின்கண் இறந்தாள். தோளி : வாசவதத்தை. இழிப்போரும் - இகழ்ந்து
கூறுவோரும்.
|