பக்கம் எண் :

பக்கம் எண்:372

உரை
 
3. மகத காண்டம்
 
20. சங்கமன்னர் உடைந்தது
 
          வலிகெழு நோன்றாள் வத்தவ மன்னற்குத்
          தருசகன் றங்கை தகையேர் சாயற்
    180    பத்திப் பைம்பூட் பதுமா நங்கை
          தக்கனள் கொடுப்பின் மிக்கதென் போரும்
 
                (வேறு சிலர் கூற்று)
            178 - 181 : வலி...............என்போரும்
 
(பொழிப்புரை) இனி, வேறுசிலர், ''வலிமை பொருந்திய முயற்சியையுடைய இந்த வத்தவ மன்னனுக்கு நம் மன்னவன் தருசகனுடைய தங்கையாகிய பெருந்தகைமையும் அழகும் சாயலும் நிரல்பட்ட பசிய அணிகலன்களுமுடைய பதுமாபதி நங்கையே கோப்பெருந்தேவியாதற்குத் தகுந்தவள் ; ஆதலின், நம்மன்னன் அவளை இவனுக்கு மணம் செய்து கொடுப்பின் மிக மிக நன்றாகும்,'' என்று கூறுவோரும் ; என்க.
 
(விளக்கம்) தாள் - முயற்சி. தகை - பெருந்தகைமை; அழகுமாம். ஏர் - அழகு ; எழுச்சியுமாம். சாயல் - மென்மை. பதுமா - பதுமை; பதுமாபதி. நங்கை - மகளிருட்சிறந்தோள். கொடுப்பின் மணம் செய்விப்பின். மிக்கது - சிறந்தது.